உலகம்

குழந்தைகளுக்கு மரபணு மாற்றம்-மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சீனாவில் குழந்தைகளுக்கு மரபணு மாற்றம் செய்ததற்காக மருத்துவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனாவைச் சேர்ந்த மருத்துவர் ஹீ ஜியாங்கு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். இவர் கடந்த ஆண்டு இரட்டை குழந்தைகளின் மரபணுவில் மாற்றம் செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.

ALSO READ  ஆற்றில் மீன் பிடிக்க 10 ஆண்டுகள் தடை: அதிர்ச்சி அளிக்கும் சீனா

HIV தொற்றை எதிர்க்கும் வகையில் அந்தக் குழந்தைகளின் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மருத்துவர் ஜியாங்குய்க்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 3கோடி ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் அவருடனிருந்த உதவியாளர் ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றொருவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அலுவலக நேரத்தில் சிகரெட் பிடிக்காமல் இருந்தால் 6 நாட்கள் எக்ஸ்டிரா விடுமுறை

Admin

பேருந்து பயணிகள் மீது திடீர் தாக்குதல்:

naveen santhakumar

கொரோனா இருக்கா..? இல்லையா..? முகத்தை பார்த்து சொல்லும் ஸ்மார்ட் செல்போன்!!

naveen santhakumar