உலகம்

UAE-ல் இந்தியருக்கு அடித்த அதிர்ஷ்டம்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

துபாய்:-

கொரோனா பரவலுக்கு இடையே ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) பணி புரிந்துவரும் இந்தியர் ஒருவருக்கு 10 மில்லியன் திர்ஹாம்  லாட்டரியில் பரிசு விழுந்துள்ளது.

இந்தியாவில் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப்குமார் எள்ளிக்கோட்டில் பரமேஸ்வரன் (Dileep Kumar Ellikkottil Parameswaran).  ஐக்கிய அரபு அமீரகத்தில் அஜ்மான் (Ajman)-ல் உள்ள வாகன உதிரிபாக தொழிற்சாலையில் (Auto Spare Parts Company) வேலை செய்து வருகிறார். இவரது மாத வருமானம் 5000 திர்ஹாம் (1361 USD). 

ALSO READ  இங்கிலாந்து நாடாளுமன்ற வளாகத்தில் தீபாவளி பிரார்த்தனை!

இதுகுறித்து கூறிய திலீப்குமார் பரமேஸ்வரன்:-

நான் எனது குடும்பத்தினருடன் கிட்டத்தட்ட பதினேழு வருடங்களாக ஐக்கிய அரபு அமீரகத்தில் பணி புரிந்து வருகிறேன். கிட்டத்தட்ட எனக்கு 7,00,000 திர்ஹாம் கடன் உள்ளது. தற்போது கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்டத்தின் மூலமாக அந்த கடனை நான் அடைத்துவிடுவேன். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். எனவே மீதப் பணத்தை அவர்களின் கல்விக்காக செலவிட போகிறேன் என்றார்.

ALSO READ  கொரோனா பாதிப்பில் இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளை பின்னுக்கு தள்ளி ரஷ்யா 3ம் இடம்...

Big Ticket Draw Raffle என்பது அபுதாபியில் நீண்ட காலமாக நடைபெறும் மிகப்பெரிய ரொக்கப்பரிசு மற்றும் சொகுசு கார்களுக்குகான மாதாந்திர குழுக்கள் ஆகும். இந்த லாட்டரி டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் வாங்கலாம்.

ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதியில் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் லாட்டரி குலுக்கல் நடைபெறும். இந்த லாட்டரி டிக்கெட் ஒன்றின் விலை 500 திர்ஹாம் ஆகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வைரலாகும் பாபா வங்காவின் 2021 குறித்த அச்சுறுத்தும் கணிப்பு…..

naveen santhakumar

ஓய்வு பெறும் நாளில் வேகப்பந்து வீச்சாளருக்கு நேர்ந்த சோகம்

Admin

துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா முதலிடம்

News Editor