உலகம்

பெண் மருத்துவருக்கு அமெரிக்க மக்கள் அளித்த கொளரவம்.. நம் மக்கள் கற்று கொள்வது எப்போது..???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கனெக்டிகெட்:-

இந்தியாவின் மைசூர் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட பெண் மருத்துவர் ஒருவர் அமெரிக்காவின் கனெக்டிகெட் (Connecticut) மாநிலத்தில் தெற்கு வின்ட்சார் (South Windsor) பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். 

இந்நிலையில் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் இவருக்கு அந்நாட்டு காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், பொதுமக்கள் என அனைவரும் அவரது வீட்டின் முன்பு வாகன அணிவகுப்பு மரியாதை செலுத்தியுள்ளார்கள். தற்பொழுது இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ALSO READ  கொரோனா எதிரோலி: Zomato-ஐ தொடருந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்தது Swiggy.. 

கோவிட் 19 (கொரோனா) நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் உமா மதுசூதனுக்கு காவல்துறையும், தீயணப்புத்துறையும், பொதுமக்களுக்கும் நன்றி தெரிவித்த காட்சி.

ஏராளமான காவல்துறை வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், பொதுமக்களின் வாகனங்கள் என 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் இவரது வீட்டின் வழியாக சைரன்களை ஒலிக்கச் செய்து, ஹார்ன் அடித்து தங்களின் மரியாதையை தெரிவித்துள்ளார்கள்.

நமது நாட்டில் உள்ள மக்கள் மருத்துவர்களுக்கு செலுத்துகிறோம் என்று மாடியில் நின்று கை தட்டுவார்கள், வீடுகளில் விளக்கு ஏற்றுவார்கள், வான வேடிக்கைகள் எல்லாம் கூட விடுவார்கள். தீப்பந்தங்களை பிடித்து அங்கும் இங்கும் அலைவார்கள். ஆனால் கொரோனா வைரஸுக்கு எதிராக போராடும் மருத்துவர் ஒருவர் இறந்தால் மட்டும் அவரின் இறுதிச் சடங்குகளை செய்வதற்கு அனுமதிக்கமாட்டார்கள். அவ்வாறு இறுதி சடங்கு செய்ய வருபவர்களை மண்டையை உடைத்து அனுப்புவார்கள்.

ALSO READ  கொரோனா சிகிச்சைக்கு கங்கை நீரை பரிந்துரைத்த மத்திய அரசு.. NO சொன்ன ICMR...

இங்கே அமெரிக்க நாட்டில் இந்திய வம்சாவளி பெண் மருத்துவருக்கு அளிக்கப்பட்ட இந்த கௌரவத்தைப் பார்த்தாவது நமது மக்கள் திருந்துவார்களா?? என்றால், மாட்டார்கள்..!!


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளை மறுநாள் தமிழகம் வருகிறார் முதல்வர்!

Shanthi

முதல்வர் கொரோனா காலத்தில் மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கினார்; அன்புமணி !

Admin

தனித்தீவில் குவியல் குவியலாக சடலங்கள் அடக்கம் செய்யப்படும் வீடியோ…..

naveen santhakumar