உலகம்

அதிர்ச்சி….. 300க்கும் மேற்பட்ட யானைகள் பலி……. நச்சு நீர்……

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென்னாப்பிரிக்கா:

தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நச்சு உருவான நீரைப் பருகிய 300-கும் மேற்பட்ட யானைகள் பலியான சம்பவம் வனத்துறை ஆர்வலர்களை அச்சமடைய செய்துள்ளது.

நீரில் உள்ள சயனோபாக்டீரியாவால் உற்பத்தி செய்யப்படும் நஞ்சுகள் 300-கும் மேற்பட்ட யானைகளை கொன்றுவிட்டனர், என்று அதிகாரிகள் திங்கட்கிழமையன்று தெரிவித்தனர்.

நீரில் மற்றும் சில நேரங்களில் மண்ணில் காணப்படும் நுண்ணிய உயிரினங்கள் சயனோ பாக்டீரியாக்கள் எனப்படுகின்றன. பொதுவாக இந்த சயனோபாக்டீரியாக்கள் அனைத்தும் நஞ்சுகளை உற்பத்தி செய்வதில்லை.ஆனால் காலநிலை மாற்றத்தின் விளைவாக உலகளாவிய வெப்பநிலை அதிகரித்து வருவதால் நஞ்சுகள் உருவாவது அடிக்கடி நிகழ்வதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போட்ஸ்வானா வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துணை இயக்குநர் சிரில் தாவோலோ, நச்சு உண்டான நீரைப் பருகியதால் 330 யானைகள் பலியாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ALSO READ  மனைவிக்கு தலைவாரியது குத்தமா? … கைது செய்த குவைத் அரசு

“மே மாத தொடக்கத்தில் முதன்முதலில் பதிவாகத் தொடங்கிய யானைகளின் இறப்புகள் ஜூலை மாதம் 330 ஆக உயர்ந்துள்ளது. எனினும் போட்ஸ்வானாவின் வனவிலங்குகள் இன்னும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ  பிரபல வயலின் இசைக்கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைந்தார்:

அதேசமயம் யானைகள் மட்டும் ஏன் பாதிக்கப்பட்டுள்ளன????? என்பது குறித்தும், பிற விலங்குகள் எவ்வாறு தப்பிப் பிழைத்தன????? என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கு கணவனைக் காண நடந்தே சென்ற வயதான பெண்மணி… 

naveen santhakumar

கடைசியில் நாய்களையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்….

naveen santhakumar

கொரோனா ஊரடங்கு உத்தரவு நேரத்தில் புதிதாக உருவாகியிருக்கும் பில்லோ சேலஞ்ச்….

naveen santhakumar