உலகம்

இந்தியாவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தை மிரட்டும் டிரம்ப்…..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

வாஷிங்டன்:-

கொரோனா விவகாரத்தில் WHO (உலக சுகாதார நிறுவனம்) சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம்சாட்டி உள்ள டிரம்ப், அதற்கு வழங்கப்படும் நிதியை ரத்து செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்தித்த ட்ரம்ப்:-

உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஒருதலைப்பட்சமாக நடந்ததாக குற்றம் சாட்டினார். கொரோனா வைரஸ் குறித்து பல தகவல்கள் முன்னரே வெளியானாலும் அவற்றை எல்லாம் உலக சுகாதார நிறுவனம் அலட்சியப்படுத்தி விட்டதாக கூறினார்.

சீனா மீது பயணத் தடை விதிக்க வேண்டும் என தாம் கூறிய போது அதை ஏற்காமல் உலக சுகாதார நிறுவனம் பெரிய தவறிழைத்து விட்டது என்பதும் டிரம்பின் குற்றச்சாட்டு. எனவேதான் உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கி வரும் நிதி உதவி நிறுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்தார்.

ALSO READ  ரயில் ஒரு நிமிடம் தாமதம் : சம்பளத்தில் ரூ.37 பிடித்தம் - ஜப்பான் ரயில்வே துறை மீது வழக்கு

டிரம்பின் குற்றச்சாட்டை உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் Dr. டெட்ரோஸ் அதானோன் கெப்ரேயேஸஸ் (Tedros Adhanom Ghebreyesus) மறுத்துள்ளார்.

சர்வதேச அமைப்பான WHO சீனாவின் கைப்பொம்மையாக மாறிவிட்டது என டிரம்ப் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

ALSO READ  சட்டமன்ற உறுப்பினர்களுக்காக பயிற்சி முகாம் !

உலக சுகாதார நிறுவனத்திற்கு பெருமளவு நிதி உதவி வழங்கும் நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா வைரஸை முதன்முதலில் கண்களால் கண்ட பெண் மருத்துவர்… அது குறித்து அவரது பேட்டி…

naveen santhakumar

ஒரு போரை தடுத்து நிறுத்திய கொரோனா வைரஸ்…

naveen santhakumar

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு !

News Editor