அரசியல்

முறைகேடுகளுக்கு பெயர்போன கட்சி திமுக; வானதி ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை ஆர்கே புரத்தில்பாரதிய ஜனதா கட்சி மாவட்ட மகளிரணி சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காயத்ரி தேவி தமிழ்நாடு மாநில மகளிர் அணி தலைவி மீனாட்சி மற்றும் நடன இயக்குனர் கலா மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டனர். நடன இயக்குனர் கலா மாஸ்டர் ரத்த தானம் செய்தார்.


அதனையடுத்து பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, ” நாடெங்கிலும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதற்கு ஜனதா கட்சியின் அனைத்து அமைப்புகளும் திறம்பட செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழக பாஜக மகளிரணி சார்பில் சென்னை மாவட்டத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த கொரோனா  காலகட்டத்தில் ரத்த தானம் என்பது குறைவாகவே உள்ளது ஆகவே மகளிர் அணி சார்பில் இந்த ரத்ததான முகாமை இன்று துவக்கி உள்ளோம் என்றார்.


அதனையடுத்து EVM இயந்திரங்களில் முறைகேடு பற்றிய பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது நிலையில் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், EVM இயந்திரங்களில் முறைகேடு என்பது சாத்தியமில்லாத ஒன்று என உச்சநீதிமன்றமே உறுதிப்படுத்தியுள்ளது. பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்ற இடங்களில் முறைகேடு நடந்துள்ளது என்பார்கள் ஆனால் பாரதிய ஜனதா கட்சி தோல்வி பெற்ற இடங்களில் மக்கள் தீர்ப்பளித்து விட்டார்கள் என்பார்கள். இதுதான் இவர்களது அரசியல் எனவும் முறைகேடுகளுக்கு பெயர்போன கட்சி திமுக தான் என்றும் கூறினார். 


Share
ALSO READ  எளிய முறையில் திருமணம்.. மற்றவர்களுக்கு முன்னோடியாக திகழும் விஜயகாந்த்....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘பாகிஸ்தான் என்ன விரும்புகிறதோ அதையே காங்கிரசும் விரும்புகிறது’ – பாஜக…!

naveen santhakumar

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் யார் ?

News Editor

எச்.ராஜா மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்த த.மு.மு.கவினர் !

News Editor