தமிழகம்

மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று;ஆரம்ப சுகாதார நிலையம் மூடல் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 6 பேருக்கு  கொரோனா  தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் கல்லூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்   மூடப்பட்டது. இதனால்  அங்கு  சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கர்ப்பிணிகள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் அப்பகுதி மக்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்

நெல்லை  மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இன்று ஒரே நாளில் 491 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கல்லூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில்  பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணிற்கு  பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில்  தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ALSO READ  'தமிழக முதல்வர்' ட்விட்டரில் மாற்றம் செய்த மு.க ஸ்டாலின் !

இதனையடுத்து அவரை அழைத்து வந்த பெண்ணின் தாய் மற்றும் அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் என ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் 25-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில்  மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் மருத்துவர்கள் மருத்துவ பணியாளர்கள் என நான்கு பேர் கர்ப்பிணியின் தாய் ஆகிய ஐந்து பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து மருத்துவமனை மூடப்பட்டுள்ளது இதில் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வந்த இரண்டு நபர்களில் ஒருவர் முக்கூடல் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாய் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்  மூடப்பட்டு உள்ளதால் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சிகிச்சை பெற வரும் நோயாளிகள் கர்ப்பிணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்… 

naveen santhakumar

மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது – சவுமியா சுவாமிநாதன்

News Editor

ரயில் நிலையத்தில் பயணிகளின் பாதுகாப்பிற்காக பயிற்சி பெற்ற இரண்டு மோப்ப நாய்கள்…

Admin