தமிழகம்

காய்கறி திட்டத்தில் முறைகேடு நடந்தால் உடனடி நடவடிக்கை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனவின் இரண்டாம் அலை மிக வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்தும் வகையில் முழு ஊரடங்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இந்நிலையில்  பொதுமக்களுக்கு தடையில்லாமல் கிடைக்கும் வகையில்  காய்கறி தொகுப்பு ரூபாய் 100 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனையடுத்து  அமைச்சர் மூர்த்தி  காய்கறி வழங்கும் திட்டத்தை ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், மதுரை மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையர் காவல்துறையினர் ஆகியோரின் கூட்டு முயற்சி காரணமாக நேற்றைய தினம் முழு ஊரடங்கு மக்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய தினம் இருந்து வீடுகளுக்குச் சென்று காய்கறிகள் கொடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை, வியாபாரிகள் சங்கம் இணைந்து சிறப்பாக செய்து வருகின்றனர். 

ALSO READ  உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளின் கீழ்வழக்கு பதிவு !

அதனைத் தொடர்ந்து பலசரக்கு சாமான்களையும் வீடுகளுக்கு சென்று கொடுக்கும் பணியை தொடங்கி செய்து வருகிறோம். மக்கள் சுய கட்டுப்பாடுடன் இருந்தால் தான் கொரோனா தொற்றின் தாக்கம் குறையும். முதல்வர் நினைக்கும் அனைத்தையும் வேகமாக மதுரை மாவட்டம் செய்து வருகிறது. காய்கறிகளின் விற்பனையில் ஏதாவது தவறு நடந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜன.31 வரை ஊரடங்கு… கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?

naveen santhakumar

அக்டோபர் – 1ந் தேதி முதல் குளிர்சாதன அரசு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு…!!

Admin

ஏடிஎம்-ல் பணம் எடுக்க தற்காலிக தடை…!

News Editor