சினிமா

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே.. பூஜா ஹெக்டேக்கு குவியும் ஆதரவு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஹைதராபாத்:-

நடிகை சமந்தாவை உருவ கேலி செய்யும் விதமாக நடிகை பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதால் சமந்தா ரசிகர்கள் தற்போது கொந்தளித்துள்ளனராம். 

தமிழில் முகமூடி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தெலுங்கு இந்திமொழிகளில் பிஸியாக வலம் வருகிறார் நடிகை பூஜா ஹெக்டே.

இவர் நடிப்பில் சமீபத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக ‘அலா வைக்குந்த புரமுலோ’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் இடம் பெற்ற “புட்ட பொம்மா” பாடல் பெறும் வரவேற்பை பெற்றது.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் சமந்தாவின் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்று வெளியானது. 

அதில்  “சமந்தா பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக ஒன்றும் இல்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனைக் கண்டு கொதிதெளுந்த சமந்தா ரசிகர்கள் நடிகை பூஜா ஹெக்டேவை சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் நடிகை பூஜா, சமந்தாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் எனக்கூறி #PoojaMustApologizeSamantha என்ற ஹேஷ் டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

ALSO READ  தளபதி 65 அப்டேட்; விஜயுடன் நடிப்பதை உறுதிசெய்த மற்றுமொரு நடிகை !

இந்நிலையில் இது குறித்த விளக்கத்தை நடிகை பூஜா ஹெக்டே தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார்:-

அதில்  “எனது இன்ஸ்டாகிராம் கணக்கை யாரோ ஹேக்செய்துவிட்டனர், கடந்த ஒரு மணி நேரமாக பதிவிடப்பட்ட எதுவும் நான் செய்ததில்லை. இந்த நேரத்தில் உடனடியாக உதவிய எனது தொழில்நுட்பக் குழுவுக்கு நன்றி. ஒரு வழியாக எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை என் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்துவிட்டேன்” என விளக்கமளித்துள்ளார். 

ALSO READ  உருவாகிறது புகழ் பெற்ற "அஞ்சாம் பாதிரா" படத்தின் இரண்டாம் பாகம் !

ஆனால் சமந்தாவின் ரசிகர்களோ எப்படி சில மணி நேரத்தில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக் செய்யப்பட்டு, உடனடியாக சரியாகும் என்று பூஜா ஹெக்டேவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும் பூஜா ஹெக்டே மன்னிப்பு கேட்டே தீர வேண்டும் என கூறி  ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் #PoojaMustApologizeSamantha என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகிறது.

இதனிடையே நடிகை சமந்தா பூஜாவின் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக, யார் என்ன சொன்னாலும் தான் மகிழ்ச்சியுடன் இருப்பேன் என்பதை உணர்த்துவது போல புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் சமந்தா வெளியிட்டுள்ளார். 

இதற்கிடையில் சமந்தா, நந்தினி ரெட்டி மற்றும் சின்மயி ஆகியோருக்கு இடையில் நடந்த ஒரு உரையாடல் ஸ்கிரீன் ஷாட் வைரலானது. அதில் பூஜா ஹெக்டேவின் இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டதை மறைமுகமாக கிண்டல் செய்யும் வகையில் பேசியுள்ளனர். 

இதனால் ஆத்திரம் அடைந்த பூஜா ஹெக்டே ரசிகர்கள் முழு உண்மையும் தெரியாமல் ஒருவரை கிண்டல் செய்வது தவறு செயல் என்று கூறி பூஜாவுக்கு #WeSupportPoojaHegde என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து தங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தற்போது சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே ரசிகர்கள் தங்கள் ஆதரவை #PoojaMustApologizeSamantha,  #WeSupportPoojaHegde என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து தெரிவித்து வருகின்றனர்.

நாட்டில் கொரோனா, வெட்டுக்கிளி படையெடுப்பு, சீனாவுடன் எல்லை பிரச்சனை என்று பல பிரச்சனைகள் நிலவும் சூழலில் இதை ஒரு பிரச்சனை என்று கருதி பெரிதாக்கும் ரசிகர்களை நினைத்து நாடே பெருமை கொள்கிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கார்த்தி படத்தில் பணியாற்றிய சிம்பு; அதிக கவனம் பெரும் “சுல்தான்” படம் !

News Editor

நடிகை “நயன்தாராவை” காண பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு 

News Editor

ரஷ்யாவில் ஹிட்டடித்த பாகுபலி 2- ரஷ்ய தூதரகம்…

naveen santhakumar