ஹைதராபாத்:-
பிரபல தெலுங்கு நடிகர் ராணா டகுபதி க்கும் அவரது காதலி மிஹீகாபஜாஜ்-ம் திருமணம் நடைபெற்றுள்ளது.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் ராமா நாயுடு வின் பேரனும் தயாரிப்பாளர் சுரேஷ் டகுபதி என் மகனும் நடிகர் வெங்கடேஷ் ரகுபதியின் அண்ணன் மகனுமான ராணா டகுபதி கும் அவரது காதலியான மிஹீகாபஜாஜ்-ம் ஹைதராபாத்தில் உள்ள ராமா நாயுடு ஸ்டூடியோவில் திருமணம் நடைபெற்றது.

மிஹீகாபஜாஜ் ஆடை வடிவமைப்பு மாடலிங் உள்ளிட்டவற்றை செய்து வருகிறார் அதேபோல இவரின் உறவினரான ஷாஷா பாலிவுட்டில் முன்னணி ஆடை வடிவமைப்பாளராக உள்ளார்.

ராமா நாயுடு ஸ்டூடியோவில் நடைபெற்ற இந்த திருமணத்தில் கொரோனா பரவல் காரணமாக மிகக் குறைந்த அளவிலேயே விருந்தினர்கள் பங்கேற்றனர்.

இந்த திருமண வைபவ புகைப்படங்களை நடிகை சமந்தா அக்கினி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டேய் சம்பந்தன் ராணா டகுபதியும் மைத்துனரான நடிகர் நாக சைதன்யாவின் மனைவி ஆவார்.



