இந்தியா

மே மத்தியில் இந்தியாவில் 30 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிர் இழக்கலாம்- அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பெங்களூரு:-

பெங்களூருவில் உள்ள ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆராய்ச்சிக் கழகம், இந்திய அறிவியல் நிறுவனம், மும்பையில் உள்ள ஐஐடி மற்றும் புனேவில் உள்ள ராணுவத்திற்கான மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் குறித்துக் ஆய்வுக் கணிப்பை வெளியிட்டுள்ளன.

இத்தாலி மற்றும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்ததன் விகிதாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.  இதன்படி, இந்தியாவில் உள்ள தற்போதைய பாதிப்புகள் மே மாத மத்தியில் எவ்வாறு இருக்கும் எனக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  மிரட்டும் கொரோனா; ஒரே நாளில் 22 ஆயிரம் பேர் பாதிப்பு !

அதன்படி, மே மாத மத்தியில் 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கலாம் எனவும், முப்பது லட்சம் பேர் பாதிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. அப்போது, சுமார் 70 ஆயிரம் பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் கவலைக்கிடமாக நிலையில் இருக்கலாம் என்றும் அந்த புள்ளி விவரம் எச்சரித்துள்ளது.

சராசரியாக இந்தியாவில் மாநில வாரியாக 1000 பேருக்கு புள்ளி படுக்கைகளின் புள்ளிவிவரம். இதில் சராசரியாக 1000 பேருக்கு ஒரு படுக்கை என்ற விதத்தில் தான் உள்ளது வடமாநிலங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது தென் மாநிலங்களை பொருத்தவரையில் ஆந்திரா தெலுங்கானா ஆகியவற்றில் வட மாநிலங்களைப் போல மிகக்குறைந்த படுக்கை வசதிகளை கொண்டுள்ளது.

ALSO READ  இனி நோ ஃபெயில் மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி....

ஒருவேளை ஆய்வு முடிவுகளின் படி இந்தியாவில் மே மத்தியில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில் ஜூன் மாதத்தில் நோயாளிகளுக்கு ஒரு படுக்கை வசதி கூட இருக்காது. அனைத்து மருத்துவ மனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பி வழியும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

3வது அலையா??- உ.பி.ல் மர்ம காய்ச்சல் 40க்கும் மேற்பட்டோர்  உயிரிழப்பு…!

naveen santhakumar

இந்திய பகுதிகளை இணைத்து புதிய வரைபடம் வெளியிட்டுள்ள பாகிஸ்தான் அரசு… 

naveen santhakumar

ரோடுரோலர் மூலம் ரூ .72 லட்சம் மதிப்புள்ள மதுபானத்தை அழித்த ஆந்திர அரசு… 

naveen santhakumar