இந்தியா

மீண்டும் பெண்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய பெண் நீதிபதி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கானோதிவாலா, பல பாலியல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கி பெரும் சர்ச்சையை கிளப்பியவர். அந்த வகையில் இவர் அண்மையில் ஒரு பாலியல் வழக்கிற்கு கொடுத்த தீர்ப்பு இந்திய முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

Justice Pushpa Ganediwala

அதில், குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைக்கு மேலே உடலை சீண்டினால், அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது என தீர்ப்பளித்தார். மேலும், ‘உடலுறவு கொள்வதை தவிர, தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே, பாலியல் அத்துமீறலாகும்’ எனக் கூறி குற்றவாளிக்கும் தண்டனையையும் குறைத்தார். இது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இதுகுறித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

Supreme Court, delhi

இது அவருக்கு புதிதல்ல இப்படி பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார் நீதிபதி புஷ்பா.  உச்சநீதிமன்ற கொலிஜியம் அவரை நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என  தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் அந்தப் பரிந்துரையை திரும்பப் பெற்றுள்ளது.  ஆனால் இதைப்பற்றி எல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் மற்றும் ஒரு சர்ச்சைக்குரிய தீர்ப்பை வழங்கியுள்ளார் நீதிபதி புஷ்பா.

ALSO READ  கட்டுப்பாட்டு அறையையும் விட்டு வைக்காத கொரோனா !
Bombay High Court

அதில் ‘வரதட்சனை கொடுமை வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட ஒரு வழக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு நீதிபதி புஷ்பாவிடம் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த அவர், ஐ.பி.சி. சட்டப் பிரிவு 498-ன் படி வரதட்சனைக் கேட்பது துன்புறுத்தல் ஆகாது’’ என கூறி குற்றவாளியை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். இதனையடுத்து நீதிபதி புஷ்பா கானோதிவாலாவின் தீர்ப்பு மீண்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

#Bombayhighcourt #supremecourt #justicepushpaganediwala #highcourt #tamilthisai #pocsoact


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் வேலை செய்து ரூ.1 கோடி ஊதியம் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியை: அதிகாரிகள் அதிர்ச்சி.. 

naveen santhakumar

ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்கள் நெற்றி மற்றும் கைகளில் முத்திரை குத்திய ஜம்மு காஷ்மீர் போலீஸ்….

naveen santhakumar

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு : மாநில பேரிடர் அறிவிப்பு

Admin