இந்தியா

சீன பொருட்கள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு?

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:-

ரூ.9.50 லட்சம் கோடி மதிப்பிலான, 371 சீன பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா  தகவல் வெளியாகி உள்ளது.

லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய – சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர் மேலும் 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. மேலும் தாக்குதலில் காயமடைந்த 50 க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால், எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ALSO READ  டிக்-டாக், ஹலோ உட்பட 59 சீன நாட்டு செயலிகளுக்கு மத்திய அரசு தடை… எவை எவை தடை செய்யப்பட்டுள்ளன??

இதனை தொடர்ந்து சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என நாடு முழுவதும் குரல்கள் ஒழித்து வருகிறது.

இந்நிலையில், சீனாவில் இருந்து, பொம்மைகள், பிளாஸ்டிக் பொருட்கள், விளையாட்டு கருவிகள், ஆடைகள், மின்னணு சாதனங்கள் உட்பட, 9.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 371 பொருட்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ALSO READ  காஷ்மீர் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி !

இதனிடையே இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் சீனாவுடன் செய்துள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்யவும், சீனப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

மேலும், இந்தியன் ரயில்வே சில சீன நிறுவனங்களுடன் செய்துள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் குடும்பத்தினருக்கு உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆறுதல்

News Editor

50 ஆயிரம் கோடியில் 6 அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்- பாதுகாப்புத் துறை அமைச்சகம் அனுமதி…! 

naveen santhakumar

பாராளமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 29 தொடங்க திட்டம்

News Editor