இந்தியா

சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு 150 ஆணுறைகளை அனுப்பிய பெண்..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கானோதிவாலா, பல பாலியல் வழக்குகளில் தீர்ப்பு வழங்கி பெரும் சர்ச்சையை கிளப்பியவர். அந்த வகையில் இவர் அண்மையில் ஒரு பாலியல் வழக்கிற்கு கொடுத்த தீர்ப்பு இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

அதில், குற்றம் சாட்டப்பட்ட நபர் சிறுமியின் ஆடைக்கு மேலே உடலை சீண்டினால், அது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையைத் தடுக்கும் போக்சோ சட்டத்தின்கீழ் குற்றமாகாது என தீர்ப்பளித்தார். மேலும், ‘உடலுறவு கொள்வதை தவிர, தோலோடு தோல் தொடர்பு ஏற்பட்டால் மட்டுமே, பாலியல் அத்துமீறலாகும்’ எனக் கூறி குற்றவாளிக்கும் தண்டனையையும் குறைத்தார். இது மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இதுகுறித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இது அவருக்கு புதிதல்ல இப்படி பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார் நீதிபதி புஷ்பா.  உச்சநீதிமன்ற கொலிஜியம் அவரை நிரந்தர நீதிபதியாக நியமிக்க வேண்டும் என  தெரிவித்திருந்த நிலையில், அண்மையில் அந்தப் பரிந்துரையை திரும்பப் பெற்றுள்ளது. அதனையடுத்து புஷ்பா கானோதிவாலா நிரந்தர நீதிபதியாக மாற்றப்படாமல் மேலும் ஓராண்டு காலம் கூடுதல் நீதிபதியாகவே தொடர்வார் என  மத்திய சட்ட அமைச்சகம்  தெரிவித்துள்ளது. 

ALSO READ  தேர்தல் முடிவுகள்; முன்னிலை வகிக்கும் திமுக...அப்செட்டில் அதிமுக ..!


இந்நிலையில்  பெண்களுக்கு எதிராக மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய புஷ்பா கானோதிவாலாவிற்கு அகமதாபாத்தை சேர்த்த ஒரு பெண் 150 ஆணுறைகளை அனுப்பியுள்ளார்.அவர் அளித்த சர்ச்சைக்குரிய தீர்ப்புகளில் ஆத்திரமடைந்ததால் அந்த பெண் இவ்வாறு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிரம்ப் பயன்படுத்தும் காடிலாக் காரில் இவ்வுளவு வசதிகளா??

Admin

பிளாட்பார்ம் விலை அதிரடி உயர்வு… முக்கிய ரயில்கள் ரத்து- ரயில்வே அறிவிப்பு….

naveen santhakumar

ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி செய்ய சீரம் இந்தியா அமைப்புக்கு டி.சி.ஜி.ஐ. அனுமதி…!

naveen santhakumar