இந்தியா

ஒரு ரூபாய் கூட தொழிலாளர்களின் கைக்கு போகாது: PM-CARES நிதி ஒதுக்கீட்டை வறுத்தெடுத்த ப.சிதம்பரம்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

கொரோனா பரவலை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட PM-CARES நிதியிலிருந்து 1,000 கோடி ரூபாய், ஊரடங்கால் பாதிக்கப்பட்ட புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் இப்படி ஒதுக்கப்பட்ட இந்த நிதியானது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கைகளுக்கு சென்று சேராது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

PM-CARES புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதைப் பார்த்து எல்லோரும் செய்யும் தவறை செய்து விடாதீர்கள். இந்த தொகையானது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கையில் தரப்படாது. மாறாக, மாநில அரசுகளிடம் தரப்படும். அவர்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆகும் போக்குவரத்து, தங்கும் இடம், மருத்துவம் மற்றும் உணவுச் செலவுகளை ஈடு செய்வார்கள். இதனால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கைக்கு ஒன்றும் சென்று சேராது, என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், பணி இல்லாமல் எப்படி பிழைத்திருப்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 

ALSO READ  கொலையா/தற்கொலையா?? தெலுங்கானாவில் ஒரே கிணற்றில் 9 பேர் சடலங்களாக மீட்பு… நீடிக்கும் மர்மம்...

அனைத்துத் தடைகளையும் தாண்டி தனது சொந்த ஊருக்கு ஒரு புலம் பெயர்ந்த தொழிலாளி சென்று சேர்ந்தார் என்று வைத்துக் கொள்வோம். கிராமத்தில் அவருக்கு எந்தப் பணியும் இல்லை. பணி இல்லை என்றால் அவருக்கு வருவாய் இல்லை. எப்படி அவர் வாழ்வார். குடும்பத்தை எப்படி வாழ வைப்பார்? என்ற முக்கிய கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

ALSO READ  பத்ம பூஷனுக்குப் பிறகு, டோக்கியோ தங்கத்தை வெல்லும் பொறுப்பு : பி.வி.சிந்து

PM-CARES நிதியிலிருந்து கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட 3,100 கோடி ரூபாயை ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 2,000 கோடி ரூபாய், வென்டிலேட்டர்கள் வாங்கவும், 1,000 கோடி ரூபாய் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், 100 கோடி ரூபாய் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

மேலும் விமர்சித்துள்ள சிதம்பரம் ரூ 20 லட்சம் கோடி என்று பிரம்மாண்டமான அறிவிப்பு. ஆனால் புலம் பெயர்ந்து நடந்தே வந்து வீடு திரும்பிய தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூடத் தரமாட்டார்கள்.

மக்கள் தொகையில் கீழ்ப் பாதியில் இருக்கும் 13 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ 5,000 கொடுங்கள் என்று சொல்கிறோம். ஏழைக் குடும்பங்களுக்கு அரசு ஒரு ரூபாய் கூடத் தர மறுக்கிறது. 

இந்த நாட்டின் ஏழைகள் இருந்தால் என்ன, மடிந்தால் என்ன என்று நினைக்கும் அரசு நம்மை ஆள்கிறது, என்று மிக காட்டமாக விமர்சித்துள்ளார் சிதம்பரம். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீர் நிலைக்குள் பாய்ந்த கார் – பிரபல நடிகை மரணம்

News Editor

கொரோனா இந்தியாவிற்கு வழங்கியுள்ள வாய்ப்புகள் என்ன.??? பொருளாதார நிபுணர் விளக்கம்…

naveen santhakumar

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி… எதற்கு தெரியுமா?

Admin