இந்தியா

கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிப்பு -ஐ.சி.எம்.ஆர்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:

இந்தியாவில் நாட்டில் கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐ.சி.எம்.ஆர். அறிக்கை தெரிவிக்கின்றது.

கொரோனா 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் 387 பேருக்கு நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதில் 111 கர்ப்பிணி பெண்களுக்கு தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததாக என ஐ.சி.எம்.ஆர். அறிக்கை கூறுகின்றது.

முதல் அலை காலகட்டத்தில் 1,143 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அறிக்கை தெரிவிக்கின்றது.

இவர்களில் 162 பெண்களுக்கு மட்டுமே, அதாவது 14.2 சதவீத பெண்களுக்கு தொற்று அறிகுறிகள் அதிகம் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ALSO READ  தமிழக முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

இதேபோல், முதல் அலையில் கர்ப்பிணி பெண்களின் இறப்பு சதவீதம் 0.7 ஆக இருந்ததாகவும், 2வது அலையில் இதுவரை இறப்பு சதவிகிதம் 5.7 ஆக பதிவாகி உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

இரண்டு அலைகளிலும் இதுவரை ஆயிரத்து 530 கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டு, 30 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் ஐ.சி.எம்.ஆர். அறிக்கை தெரிவிக்கிறது.

ALSO READ  செங்கல்பட்டில் தடுப்பு மருந்து தயாரிக்க பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி ?

இதன் மூலம், இந்தியாவில் கொரோனா தொற்றின் முதல் அலையை விட 2வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிக பாதிப்புகளும் இறப்பும் ஏற்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்து உள்ளது .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளியில் கெத்து காட்டிய ஆராத்யா பச்சன்!

Admin

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா! அடுத்த முதல்வர் யார்?

News Editor

டெல்லி சட்டசபைக்கான தேர்தல்: பிப்ரவரி 8ம் தேதி

Admin