இந்தியா

ஆப்கன்: தலிபான்கள் தாக்குதலில் ‘புலிட்சர்’ விருது பெற்ற இந்திய புகைப்பட செய்தியாளர் உயிரிழப்பு ..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

காபூல்:-

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்பட செய்தியாளர் தனிஷ் சித்திக்கி நேற்று இரவு உயிரிழந்ததார்.

ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், தலிபான்களுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. தலிபான்களை அடக்குவதற்காக ராணுவம் தாக்குதல் நடத்துவதும், ராணுவத்தினர் மீது தலீபான்கள் தாக்குதல்கள் நிகழ்த்துவதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர் கந்தகாரில் தலிபான்கள் நடாத்திய தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச்செய்தியாளர் தனிஷ் சித்திக்கி மரணம் அடைந்துள்ளார்.

மும்பையை சேர்ந்த தனிஷ் சித்திக்கி, கடந்த 2018ம் ஆண்டு புலிட்சர் விருது பெற்றவர்.

ALSO READ  ஆப்கனில் இந்தியர்கள் கடத்தல்? தலிபான்கள் பதில் என்ன ??
An Imprint of Reality: Award-winning photojournalist Danish Siddiqui's  legacy in photos

டில்லி கலவரம், கொரோனா ஊரடங்கின் போது புலம்பெயர்ந்தவர்களின் இன்னல், கொரோனாவால் உயிரிழந்தவர்கள் சிதை குறித்து இவர் எடுத்த புகைப்படங்கள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தன.

A man walks past burning funeral pyres of people, who died due to COVID-19, at a crematorium ground in New Delhi on April 22, 2021. (Image: Reuters/Danish Siddiqui)

ராய்ட்டர்ஸ் நிறுவனத்தில் மூத்த புகைப்பட செய்தியாளராக பணியாற்றி வந்தார். ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தலிபான்கள் தாக்குதல் குறித்த புகைப்படங்களை எடுக்க சென்ற குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.

ALSO READ  மகள்களின் படிப்புக்காக தினமும் 12 கி.மீ. பயணம் செய்யும் தந்தை

சில நாள்களுக்கு முன், தனது டுவிட்டர் பக்கத்தில் ‘தலிபான்களின் தாக்குதலில் இருந்து உயிர் தப்பித்துள்ளேன்’ எனப் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் கட்டணம் 100 சதவீதம் தள்ளுபடி… எதற்கு தெரியுமா?

Admin

BPO ஊழியர்கள் எங்கிருந்தும் வேலை செய்யலாம்-அரசு அனுமதி:

naveen santhakumar

மனைவியின் தலையை துண்டித்து கையோடு காவல்நிலையம் எடுத்து சென்ற கணவர்

Admin