தமிழகம்

ஒமைக்ரான் அச்சுறுத்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு புதிய உத்தரவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு விழிப்புணர்வு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Tamil Nadu opts for Fisher test to detect Omicron variant | Latest News  India - Hindustan Times

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் தொற்று இந்தியாவிற்குள் நுழைந்து அண்டை மாநிலமான கர்நாடகம் வரை வந்துள்ள நிலையில், ஒமைக்ரான் பரவாமல் தடுக்க விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான் தமிழகத்தில் பள்ளிகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.

ALSO READ  எனக்கு கொரோனா இல்லை; ராதிகா சரத்குமார் விளக்கம் !

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில்,

வேகமாக பரவும் ஒமைக்ரான் வைரஸ் காரணமாக விழிப்புணர்வு மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பள்ளிகளில் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்.

அனைத்து வகை பள்ளிகளிலும் அரசால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம்.

tn school reopen: தொடக்கப் பள்ளிகள் திறப்பு; புதிய உத்தரவை பிறப்பித்த கல்வி  அமைச்சர்! - minister anbil mahesh poyyamozhi important discussion about  primary school reopening | Samayam Tamil

1 முதல் 8-ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். நேரடியாகவும், ஆன்லைனிலும் வகுப்புகள் நடைபெறலாம்.

ALSO READ  சேலத்தில் வெறிச்சோடிய வீதிகள்; புதிய கட்டுப்பாடுகள் அமல் !

மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த வேண்டும். வகுப்பறைகளிலும், பள்ளிகளிலும் தனி மனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

தனியார் பள்ளிகளில் நீச்சல் குளங்களை மூட வேண்டும். இறைவணக்கக் கூட்டம், விளையாட்டு நிகழ்ச்சிகள், கலாச்சார நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும்.

நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை செயல்பாடுகளை அனுமதிக்கக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வ.உ.சிதம்பரனார் பற்றிய புத்தகங்களை வெளியிட்டார் முதலமைச்சர் ..!

naveen santhakumar

ஜவுளிக்கடையின் புதிய யுக்தி….ரோபோட் மூலம் வாடிக்கையாளர்கள் வரவேற்பு:

naveen santhakumar

கோயில் நிலத்தை அபகரித்தால் குண்டர் சட்டம் -உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Admin