உலகம்

ஆண்கள் 30 வயதுக்குள் திருமணம்: பெண்கள் 35 வயதுக்குள்ள 2 குழந்தைகளுக்கு தாயாக வேண்டும்- புதிய திட்டம் தீட்டிய நாடு எது தெரியுமா??… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் தான் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை அதிரடியாக அறிவித்துள்ளது.

96 மில்லியன் மக்கள் தொகை உள்ள வியட்நாமில் கடந்த 1980களில் இருந்தே குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதாவது ஒரு பெண்ணின் மகப்பேறு சராசரியாக 4 குழந்தைகளாக இருந்த நிலையில் இருந்து தற்போது சராசரியாக 2.09 ஆகக் குறைந்துள்ளது. இதில் நகர்ப்புறங்களில் ஒரு பெண்ணின் சராசரி மகப்பேறு 1.83 குழந்தையாகவும் கிராமப்புறங்களில் 2.26 ஆகவும் உள்ளது.

நாட்டின் மிகப்பெரிய நகரமான கோசிமின் சிட்டியில் (Ho Chi Minh City) 1.39 ஆக உள்ளது. 

ALSO READ  நடுரோட்டில் குளித்துக்கொண்டே பைக் ஓட்டிய வாலிபர்கள்

இதனால் நாட்டில் வயதானவர்கள் விகிதம் அதிகரிக்கிறது. மேலும் வியட்னாமில் கருவுறுதல் விகிதம் (Fertility Rate) குறைந்து வருகிறது. 

(1960களில் ஐ.நா-வின் மக்கள்தொகை நிதி அமைப்பு (United Nations Population Fund)  தம்பதிகள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என்ற பாலிசியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது).

தவிர, நாட்டில் குறைவாகவே உள்ள படித்த இளைஞர்களும் வெளிநாட்டிற்கு சென்றுவிடுவதால், நாட்டில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்துவிடுகிறது.

இதனால் உழைப்பவர் எண்ணிக்கையும் குறைந்துவருகிறது. எனவே ஆண்கள் 30 வயதுக்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றும், பெண்கள் 35 வயதுக்குள் 2 குழந்தைகளுக்கு தாயாக வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

ALSO READ  கிறிஸ்துமஸை முன்னிட்டு “வியட்நாம்” செல்ல சிறப்பு சலுகைகள் வழங்கும் ஐ.ஆர்.சி.டி.சி
courtesy.

இவ்வாறு திருமணம் செய்துகொள்பவர்களுக்கு வீடுகள் வாங்க, வாடகைக்குப் பெற, கல்விக் கட்டண சலுகைகள், பள்ளி சேர்க்கை, ஆகியவற்றில் முன்னுரிமை வழங்கப்பட உள்ளதாகவும், இரு குழந்தைகள் பெற்ற பெண்களுக்கு வருமான வரிச் சலுகைகள், அதிகப்படியான மகப்பேறு விடுமுறை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் கொரோனாவால் சீர்குலைந்த நாட்டின் பொருளாதார நிதி நிலையும், சீக்கிரமே திருமணம் செய்வதால் குடிமகன்களுக்கு பொறுப்பும் ஆரோக்கியமான மனநிலையும் உண்டாகும் என்பதே அரசின் திட்டம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

புதிய வைரஸ் தாக்குதலா??- 350-க்கும் மேற்பட்ட யானைகள் திடீர் உயிரிழப்பு…

naveen santhakumar

மனைவியின் பிறப்புறுப்பை பசை போட்டு ஒட்டிய கணவன்!!

Admin

போலீசிலிருந்து தப்ப நினைத்து தலைகீழாக அந்தரத்தில் தொங்கிய பெண்- CCTV காட்சிகள்…

naveen santhakumar