உலகம் விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக் செல்லும் தமிழக நீச்சல் வீரர் சாஜன் பிரகாஷ்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நெய்வேலியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தவர் சாஜன் பிரகாஷ். பள்ளியில் படிக்கும்போதே நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமான என்எல்சியின் விளையாட்டுப் பயிற்சிக் குழு இணைந்து நீச்சல் பயிற்சி பெறத் தொடங்கினார்.

Swimming Federation announces Rs 5 lakh cash reward for Olympic-bound Sajan  Prakash

நெய்வேலியில் மேற்கொண்ட ஆரம்ப கால தீவிர நீச்சல் பயிற்சி தான் சாஜன் பிரகாஷ்-க்கு இப்போது கைகொடுத்து வருகிறது.

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள செட் கோலி டிராபியில் இரண்டு தினங்களுக்கு முன் நடந்த ஆண்கள் 200 மீட்டர் பிரிவில் சாஜன் பிரகாஷ் கலந்துகொண்டார். இப்போட்டியில் 1:56:38 வினாடிகளில் வெற்றிக்கான நேரத்தை எட்டிப்பிடித்து, தங்கப்பதக்கம் பெற்றார். இதன் மூலம் சாஜன் பிரகாஷ் நேரடியாக ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றுள்ளார்.

ALSO READ  வரதட்சணை வாங்கினால் பட்டம் ரத்து - பல்கலைக்கழகங்கள் அதிரடி

ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்ற சாஜன் பிரகாஷ் வயது 27. இவரது பூர்வீகம் கேரளா மாநிலம் ஆகும். கேரள காவல்துறையில், சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார்.

Report claims Tokyo Olympics to be cancelled, Japanese government says

சாஜன் பிரகாஷ்-க்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா சாஜன் சாதனை குறித்து தனது டுவிட்டரில்,

ALSO READ  இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்; இந்திய பெண்மணி உயிரிழப்பு !

“ஆச்சரியமாக இருக்கிறது சாஜன்! இது போன்ற வெற்றிகள் மூலம் கிடைக்கும் சமிக்கை, விளையாட்டுகளை இந்தியர்கள் முதலிடத்தில் வைப்பதற்கான ஒரு புதிய சகாப்தத்தை குறிக்கிறது என்று நம்புகிறேன்,” என குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இறுதிச்சடங்குகள் நடைபெறும் கடைசி நேரத்தில் பிணப்பைக்குள் இருந்த பெண்மணி அலறியதால் பரபரப்பு….

naveen santhakumar

ஓய்வு பெறும் நாளில் வேகப்பந்து வீச்சாளருக்கு நேர்ந்த சோகம்

Admin

நேரலையில் நிருபரை துரத்திய பன்றி – வைரலாகும் வீடியோ

Admin