அரசியல்

எதிர்க்கட்சித் தலைவரா நயினார் நாகேந்திரன்? – அதிமுகவுக்கு ஷாக் தந்த கல்வெட்டு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழக எதிர்க்கட்சி தலைவராக பழனிசாமி உள்ள நிலையில் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை எதிர்க்கட்சி தலைவர் என குறிப்பிட்டு திருப்பத்தூரில் கல்வெட்டு அமைத்திருக்கும் விவகாரம் அதிமுகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நயினார் நாகேந்திரன் எதிர்க்கட்சி தலைவரா? நட்டா திறந்த கல்வெட்டில் எழுந்த சர்ச்சை

பாஜக அகில இந்திய தலைவர் ஜே.பி.நட்டா தமிழகத்து பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது, நவம்பர் 24ஆம் தேதியன்று திருப்பூருக்கு வந்த ஜே.பி.நட்டா அங்கிருந்து திருப்பூர், ஈரோடு, திருநெல்வேலி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய பாஜக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைத்தார்.

அப்படி திறந்து வைக்கப்பட்ட திருப்பத்தூர் மற்றும் திருப்பூர், பாஜக மாவட்ட அலுவலகங்களில் வைக்கப்பட்ட கல்வெட்டில் நயினார் நாகேந்திரன் பெயருக்கு கீழ் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என பொறிக்கப்பட்டிருக்கிறது.

ALSO READ  மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து… உயர் நீதிமன்றம் அதிரடி!

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏனெனில் ஆதிமுக-வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக உள்ள நிலையில், பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரனை எதிர்க்கட்சி தலைவர் என குறிப்பிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட தலைவர்களிடம் தெரிவித்திருப்பதாகவும் ‘விரைவில் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன்’ என்று மாற்றப்படும் என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

ALSO READ  முதல்வர் ஸ்டாலினின் முதல் 5 கையெழுத்து !

இதனிடையே நயினார் நாகேந்திரன் முன்னாள் அதிமுக உறுப்பினர் என்பதும், அதிமுகவின் முக்கிய குழுவான வழிகாட்டுதல் குழுவை சேர்ந்த மாணிக்கம் அண்மையில் பாஜகவில் இணைந்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராயபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க்கில் புகுந்த கார்

Admin

Fact Check: இந்தியாவிற்கு எதிராக ஓமன் இளவரசி மோனா பெயரில் போலியான ட்வீட்..!!!

naveen santhakumar

அசாமில் நடைமுறைக்கு வருகிறது குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமைக்கான ஆதாரம் இல்லாதவர்களுக்கு சிக்கல்

Admin