ஜோதிடம்

மாசி மாத பலன்கள்… படிப்படியாக முன்னேறும் சிம்ம ராசிக்காரர்களே…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்த மாதம் முழுவதும் ராசிக்கு ஏழாம் இடத்தில் ராசிஅதிபதி சஞ்சரிப்பது மிகச் சிறந்த அமைப்பாகும். இந்த அமைப்பில் சூரியனுடன் புதன் சேர்ந்து இருப்பது ஒரு எக்ஸ்ட்ரா பிளஸ் பாயிண்ட் என்றே சொல்லலாம். எந்த ஒரு விஷயத்தையும் நேரடியாக கையாளும் சிம்மராசி நண்பர்களே சூரியன் ஏழாம் இடத்தில் இருந்து உங்கள் ராசியை பார்ப்பது உங்களுடைய இயல்பான குணத்திற்கு வலு சேர்ப்பதாகும். உங்களின் ராசிக்கு யோகாதிபதிகள் ஆன குருவும் செவ்வாயும் இணைந்து ஐந்தாம் இடத்தில் இருப்பது நல்ல அதிர்ஷ்டத்தை குறிக்கின்றது.

ஆட்சி நிலையில் வலுவடைந்து குரு உங்களுடைய ராசிக்கு 9-ஆம் இடத்தைப் பார்த்து அதே ராசிக்கு அதிபதியான செவ்வாயுடன் இணைந்து இருப்பது இம்மாதம் முழுவதும் நீங்கள் நல்ல பாக்கியங்களை அனுபவிக்கப் போகிறீர்கள் என்பதை குறிக்கின்றது.பாவ கிரகங்கள் பொதுவாக கேந்திரங்களில் அல்லது உபஜெய ஸ்தானங்களில் இருப்பது சிறப்பான அமைப்பாகும். சிம்மத்திற்கு மிக முக்கியமானபாவ கிரகமான சனியும் ராகுவும் முறையே ஆறாம் இடத்திலும் 11ம் இடத்திலும் இருப்பது மிகச் சிறந்த அமைப்பாகும். ஆறாம் இடத்தில் ஆட்சி பெறும் சனி கடன் நோய் எதிரி இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து உங்களை விடுவிப்பார். உபஜெய ஸ்தானம் ஆனா ஆறாம் இடத்தில் ஆட்சி பெற்றுள்ள சனி உங்களுடைய மறைமுக எதிரிகளை தவிடுபொடி ஆக்குவார்.

புதிய கடன்கள் வாங்குவதை தவிர்த்துக்கொள்ளுங்கள் உடல் நலமும் மன நலமும் சீர்படும்.உங்களை யோகா போன்ற பயிற்சிகளில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். உபஜெய ஸ்தானமான 11-ம் இடத்தில் திருவாதிரையில் பயணிக்கும் ராகுவும் உங்களுடைய வெளிவட்டார நட்புகளை பன்மடங்காகப் பெருக்குவார்.லாபங்கள் அதிகரிக்கும்.
இந்த அமைப்பை குரு தன்னுடைய ஏழாம் பார்வையால் ஆட்சிபெற்று நிலையில் மிக வலுவான முறையில் பார்ப்பதனால் எல்லா விதத்திலும் உங்களுக்கு யோகங்களே. பத்தாம் இடத்திற்கு அதிபதியான சுக்கிரன் எட்டாம் இடத்தில் உச்சம் பெற்றிருப்பது தொழிலில் உள்ள மறைமுக எதிரிகளை வெல்வீர்கள் என்பதை உணர்த்துகிறது கணவன் மனைவி உறவு சந்தோஷமாக இருக்கும்.

ALSO READ  கொரோனா பரவல்; திமுக சார்பில் கபசுர குடிநீர் !

பெண்கள் சம்பந்தப்பட்ட நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும் அரசாங்க வேலையில் இருப்பவர்களுக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கும் இது நல்ல மாதம். உறவினர்களால் செலவு அதிகரிக்கும் உங்களுடைய மதிப்பு மரியாதை கவுரவம் மேன்மையடையும். உச்சம் அடைந்த சுக்கிரன் உங்களுடைய இரண்டாம் இடத்தைப் பார்ப்பது உங்களுடைய சொல்லைக் கேட்டு அடுத்தவர்கள் நடப்பார்கள் என்பதை குறிப்பிடுகின்றது. திடீர் பண வரவுகளும் எதிர்பாராத லாபங்களும் கிடைக்கும். கடந்தகாலத்தில் உடலிலும் மனதிலும் சோர்வுடன் காணப்பட்ட நீங்கள் இந்த மாதம் முழுவதும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு உங்களுடைய நிலைமை படிப்படியாக முன்னேறும்.

சந்திராஷ்டம நாட்கள் அன்றுஅணைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

ALSO READ  இந்தாண்டில் உச்சம் தொட்ட கொரோனா; ஒரே நாளில் 70 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு !

சந்திராஷ்டம நாட்கள்: 25-ம் தேதிமதியம் 12.30முதல் 28-ம் தேதி அதிகாலை1:10வரை.

வழிபட வேண்டிய தெய்வம்:விநாயகர்.

இந்த ஜோதிட பலன்களை கணித்தவர் திருமதி. ஜனனி ஸ்ரீதர் (DNA astrologer) . மேலும் சந்தேகங்கள் மற்றும் பலன்களுக்கு astrotamiltalk@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

மேலும் காணொளியில் காண: https://bit.ly/2OukP6E


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆண்களின் சக்தியை அதிகரிக்கும் சிதறு தேங்காய்…

naveen santhakumar

மாசி மாத பலன்கள்… கவனத்துடன் செயல்படும் கும்ப ராசிக்காரர்களே…

Admin

இந்தத் திசையில் பீரோவை வைத்தால் கண்டிப்பாக செல்வ வளம் பெருகும்:

naveen santhakumar