விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2021/04/kamal-haasan-lokesh-kanagaraj-movie-vikram-official-update-with-pic-goes-viral-photos-pictures-stills-1.jpeg)
ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரிக் மீடியா இணைந்து தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு விக்ரம் என பெயரிடப்பட்டுள்ளது. பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2021/04/FAHAD.jpg)
முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில் இப்படத்தில் இருந்து விலகினார். அதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
![](https://tamilthisai.com/wp-content/uploads/2021/04/Raghava-Lawrence.jpg)
அதன்படி நடிகர் ராகவா லாரன்ஸ் ருத்ரன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார், அதனையடுத்து சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதால் தேதி பிரச்சனையின் காரணமாக விக்ரம் படத்தில் நடிக்க முடியாமல் போனது என ராகவா லாரன்ஸ் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
#kamal #kamalhassan #Lokeshkanagaraj #VikramTamilmovie #cinema #cinemanews #cineaupdate #cinenews #TamilThisai #FahadFaasil #kollywood #RaghavaLawrence #Cinematimes