சினிமா

‘கர்ணன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்து வருகின்றனர். ‘கர்ணன்’ படத்தினை தாணு தயாரித்து வருகிறார். படத்தின் அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.

அண்மையில் படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கர்ணன் படம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதில் “கர்ணன் படம் பார்த்தேன். வியந்துபோனேன். தனுஷ், மாரி செல்வராஜ், வி கிரியேஷன்ஸ் மற்றும் அற்புதமான குழுவினர் அனைவரையும் நினைத்து பெருமைப்படுகிறேன் என கூறியிருந்தார்.

அதனையடுத்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதனையடுத்து அண்மையில் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக நடிகர் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ALSO READ  ரஜினி அரசியலில் இருந்து பின்வாங்கியதால்...அதிர்ச்சியில் ரசிகர் மரணம்...!

இந்நிலையில் படக்குழு ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில், கர்ணன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படம் வெளியாகும் தேதி இரண்டும் நாளை (14.2.2021) காலை 11.06 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.இத்தகவலை அறிந்த ரசிகர்கள் இணையத்தில் தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கோல்டன் குளோப் விருது விழாவில் நிக் ஜோனஸ் உடன் பங்கேற்ற பிரியங்கா சோப்ரா

Admin

வைரலாகும் திரிஷாவின் மிஸ் சென்னை பட்டம் பெற்ற புகைப்படம்:

naveen santhakumar

மம்முட்டியுடன் இணையும் மஞ்சுவாரியர்!

Admin