இந்தியா விளையாட்டு

ஒலிம்பிக் சீசனை சாதனையுடன் தொடங்கிய நீரஜ் சோப்ரா!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி போட்டியில் இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி ஏறிதல் போட்டியில் வெள்ளி வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

பின்லாந்தில் நடைபெற்ற பாவோ நூர்மி விளையாட்டு போட்டியில் கலந்து கொண்ட நீரஜ் சோப்ரா 88.30 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
கடந்த ஆண்டு பாட்டியாலாவில் நடைபெற்ற போட்டியில் 88.07 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா தேசிய அளவில் சாதனை படைத்திருந்த நிலையில் தற்போது அந்த சாதனையை அவரே முறியடித்துள்ளார்.

இந்த போட்டியில் 89.83 மீட்டர் தூரத்திற்கு பின்லாந்து வீரர் ஆலிவர் ஹெலாண்டர் தங்கப்பதக்கமும் ,நடப்பு உலக சாம்பியனான கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 86.60 மீட்டர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.

ALSO READ  இந்தியால 2 நாளெல்லாம் என்னால இருக்க முடியாது … அதிர வைத்த ட்ரம்ப்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா இந்தியாவிற்கு பெருமை தேடி தந்தது குறிப்பிடத்தக்கது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு அவர் கலந்து கொண்ட முதல் போட்டி இதுவே ஆகும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீட் நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் அறிவிப்பு

News Editor

இந்திய ராணுவத்தின் புதிய Tour Of Duty திட்டத்திற்கு பிரணிதா பாராட்டு…

naveen santhakumar

நியூசிலாந்தை சம்பவம் செய்ய காத்திருக்கும் இந்திய அணி

Admin