தமிழகம்

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு; தமிழக முதல்வர் பரிசீலனை !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று இல்லை.

மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் எப்படி மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என பலரும் கேள்வி  வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கு வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது அடுத்து இன்று மருத்துவ வல்லுநர்களுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன், தவாக சார்பில் வேல்முருகன், மமக சார்பில் ஜவாஹிருல்லா, கொமதேக சார்பில் ஈஸ்வரன், திமுக சார்பில் எழிலன், மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார், புரட்சி பாரதம் சார்பில் ஜெகன்மூர்த்தி, சிபிஐ சார்பில் தளி ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் சார்பில் நாகை மாலி, பாஜக சார்பில் ஜி.கே மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ALSO READ  நில அளவீட்டு கட்டணத்தை 40 மடங்கு உயர்வு: தமிழக அரசு அரசாணை வெளியீடு!... 

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தினால்தான் கொரோனாவை குறைக்கமுடியும் என கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த முக்கிய அறிவிப்பு கூட்டத்தின் முடிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்த கர்ப்பிணி பெண்…

Admin

தமிழகம் வந்தடைந்தது கொரோன தடுப்பு மருந்து !

News Editor

நந்தா கல்விக்குழுமத்தில் வருமான வரித்துறையினர் சோதனை:

naveen santhakumar