உலகம்

கடைசிவரை கொரோனா வைரஸ்க்கு மருந்து கிடைக்காமலே போகலாம்- WHO.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஜெனிவா:-

கொரோனா வைரஸுக்கான சரியான தடுப்பு மருந்து ஒருபோதும் கிடைக்காமல் கூட போகலாம் என, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களைச் சந்தித்த டெட்ரோஸ்:-

நோய்த்தொற்று தடுப்பிற்கான சில மருந்துகள் 3ம் கட்ட பரிசோதனையில் இருந்தாலும், தற்போதைக்கு அவை துல்லியமான தீர்வுகளை தரக்கூடியதாக இல்லை என தெரிவித்துள்ளார்.  என்னிடம் ஏராளமான தடுப்பு மருந்துகள் தற்பொழுது பரிசோதனைகள் உள்ளன விரைவில் அவை ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நாம் நம்புவோம்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, கைகளை அடிக்கடி கழுவுவது மற்றும் தீவிர பரிசோதனைகள் ஆகியவற்றை கடுமையாக அமல்படுத்த உலக நாடுகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும்,  மாஸ்க் அணிவது கொரோனா வைரஸுக்கு எதிராக உலகளாவிய ஒற்றுமையின் அடையாளமாக மாற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ALSO READ  அதிகரிக்கும் கொரோனா பரவல்; புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு !

கடந்த நான்கு ஐந்து மாதங்களில் ஒருமுறை கூட ரெட் டெட்ரோஸ் நம்பிக்கை அளிக்கக் கூடிய விதத்தில் பேசியதே இல்லை. டெட்ரோஸை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவில் ஊதுகுழல் என்று வர்ணித்தார், அதோடு டெட்ரோஸின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். தற்போது பல்வேறு தரப்பிலிருந்தும் உலக சுகாதார அமைப்பின் தலைவராக விளங்கும் டெட்ரோஸ் உலக ஃபார்மா கம்பெனிகளின் ஊதுகுழலாக பேசுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஏனெனில் இதுவரையில் உலக சுகாதார நிறுவனம் எந்த விதமான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து கூறாமல் தொடர்ந்து அவநம்பிக்கை அளிக்கும் விதமாகவே செய்திகள் வெளியிட்டு வருகிறது என்று பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகிறது. 

ALSO READ  பிரபல பாலிவுட் நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி !

இதுபோன்ற தொடர் விமர்சனங்கள் வைக்கப்படுவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கடந்த வருடத்தில் இது போன்ற மிகக் கொடிய நோய் தொற்று பரவுகிறது என்பதை உலக சுகாதார நிறுவனம் கண்காணிக்க தவறிவிட்டது என்று பல்வேறு தரப்பிலும் முன்வைக்கும் மிக முக்கிய குற்றச்சாட்டாகும்.  இதனைத் தொடர்ந்து இதை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து துரித நடவடிக்கைகளில் உலக சுகாதார நிறுவனம் ஈடுபடவில்லை, மேலும் இந்த வைரஸ் எங்கிருந்து பரவியது என்பது குறித்து முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் WHO மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் எதற்கு WHO முறையான பதிலளித்தாக தெரியவில்லை.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் கருப்பினத்தவர் நடுரோட்டில் கழுத்தில் காலை வைத்து தாக்கி கொன்ற போலீசார்- கலவர பூமியான அமெரிக்கா… 

naveen santhakumar

2022ம் ஆண்டு வரை பூஸ்டர் தடுப்பூசிகள் போடும் திட்டத்தை பணக்கார நாடுகள் தவிர்க்க வேண்டும்

News Editor

இந்தியாவை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் டிக்டாக்-க்கு தடை…. 

naveen santhakumar