இந்தியா

வடகிழக்கில் நிலநடுக்கம் – ரிக்டரில் 3.6 ஆக பதிவு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அருணாசல பிரதேசத்தின் இடாநகரில் இருந்து வடமேற்கே 80 கி.மீ. தொலைவில் இன்று அதிகாலை 1.24 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி உள்ளது.

Earthquake of 4.6 intensity hits Himachal Pradesh

இந்நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

இதனிடையே, 2 -3 நாட்களாகவே தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. நேற்று லடாக்கில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 3.8 ஆக பதிவானது. அதேபோல, இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ரா தீவில் நேற்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5 ஆக பதிவாகியிருந்ததாக தேசிய பூகம்பவியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

ALSO READ  வேலூரில் மீண்டும், மீண்டும் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

இதேபோல் நேற்று ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கம் சிபா மாகாணத்தில் 80 கிமீ ஆழத்தில் மையம் கொண்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

In Pictures: Strong quake off Japan's Fukushima | Gallery News | Al Jazeera

பெரிதான பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை, எனினும் சிபா பகுதியில் 4 பேர் நிலநடுக்கத்தால் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ALSO READ  இந்தியாவின் முதல் கொரோனா நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று…!

பாகிஸ்­தா­னின் பலு­சிஸ்­தான் மாநில தலை­ந­கர் குவெட்­டா­வில் இருந்து சுமார் 100 கி.மீ. தொலை­வில் உள்ள பல பகுதிகளி­லும் நேற்று முன்தினம் அதி­காலை திடீ­ரென நில­ந­டுக்­கம் ஏற்­பட்­ட­தில் 20 பேர் உயிரிழந்தனர்.

Pakistan earthquake kills 20 in Balochistan province - BBC News

200க்கும் மேற்­பட்­ட­வர்­கள் காய­ம­டைந்­த­தாக அதி­காரி­கள் தெரி­வித்­த­னர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளியில் கெத்து காட்டிய ஆராத்யா பச்சன்!

Admin

“புடி புடி” பெண்களை “பொடி பொடி”யாக்கும் வலைதளவாசிகள்:

naveen santhakumar

புதுச்சேரிக்கு கண்டிப்பாக மாநில அந்தஸ்து வேண்டும்; முதலமைச்சர் நாராயணசாமி

News Editor