தமிழகம்

கொரோனா தடுப்பூசி முகாம்; காற்றில் பறக்கும் சமூக இடைவெளி !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் கடந்த 3 நாட்களாக 800 ஐ தாண்டி வரும் நிலையில் நோய் தொற்றை காட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சுகாதாரத்துறையினர் சாபர்பில் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதன் படி மாவட்டத்தில் இன்று 18 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒவ்வொரு முகாம்களிலும் தலா 100 நபர்கள் வீதம் 1800 நபர்களுக்கு முதல் தவனை கோவீசீல்ட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த 18 முகாம்களிலுமே 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியானது போடப்பட்டு வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முக கவசம் அணிந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இருந்தாலும் சமூக இடைவேளியினை பின்பற்றாமல் தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் நோய் தொற்று பரவல் அபாயமும் ஏற்பட்டுள்ளதால் மாவட்ட சுகாதாராத்துறையானது தடுப்பூசி போடும் முகாம்களை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுத்துள்ளது.

ALSO READ  யுவன் இசையில் மிரட்டும் மாநாடு படத்தின் மோஷன் போஸ்டர் !

எனவே நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை அரசால் ஏற்படுத்தப்பட்ட முகாம்களில் 1 லட்சத்து 61 ஆயிரத்து 49 நபர்களுக்கு முதல் தவனை தடுப்பூசிகளும் 54 ஆயிரத்து 263 தடுப்பூசிகளும் தனியார் மருத்துவமனைகளில் 2 ஆயிரத்து 899 நபர்கள் என மொத்தம் 2 லட்சத்து 18 ஆயிரத்து 215 நபர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.

ALSO READ  ரியர் வியூ கண்ணாடிகள் அகற்றுவதால் விபத்துக்கள் அதிகரிக்கிறது- உயர் நீதிமன்றம்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

5 நாட்களுக்கு கனமழை தொடரும்; 16 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்

naveen santhakumar

நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் பாதிப்பு – இன்பார்க்ட் என்றால் என்ன ???

naveen santhakumar

34 வகையான கடைகளுக்கு நாளை முதல் கட்டுப்பாடுகள் தளர்வு – தமிழக அரசு அறிவிப்பு..

naveen santhakumar