அரசியல்

முன்னிலை வகிக்கும் கமல்; பின்னடைவை சந்திக்கும் காங்கிரஸ் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (2.5.2021) காலை  8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பிறகு இ.வி.எம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி எடப்பாடி பழனிசாமி  தலைமையிலான அதிமுக கூட்டணி 80 சட்டமன்ற தொகுதிகளிலும், ,ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி 153 சட்டமன்ற தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.  கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கூட்டணி 1 சட்டமன்ற தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. 

நடிகர் கமல்ஹாசன் போட்டியிடும் கோவை தெற்கு தொகுதியில் மும்முனை போட்டி நிலவிய வருகிறது. காலையில் இருந்து முன்னிலையில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் மயூரா. எஸ்.ஜெயக்குமார் தற்போது பின்னடைவை சந்தித்து வருகிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கமல்ஹாசன் தற்போது 26,002 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

ALSO READ  அனைத்துக்கட்சி கூட்டத்திலிருந்து ‘அவசர அவசரமாக’ வெளியேறிய வானதி… பரபரப்பு பேட்டி!

இவரை தொடர்ந்து பாஜக வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் 24, 257 வாக்குகள் பெற்று பெற்றுள்ளார். 21,993 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் மயூரா.எஸ்.ஜெயக்குமார் கடும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அசாமில் நடைமுறைக்கு வருகிறது குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமைக்கான ஆதாரம் இல்லாதவர்களுக்கு சிக்கல்

Admin

பெயர் அரசியலால் நீர்த்து போகிறது -அன்புமணி கேள்விக்கு நடிகர் சூர்யா பதில்

naveen santhakumar

ரூ.501.69 கோடி பயிர்க்கடன் தள்ளுபடி… 110 விதியின் கீழ் அதிரடி!

naveen santhakumar