தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
இங்கிலாந்துக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார். ஆனால் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் அதிகம் பரவியதால் இந்த பயணம் இரத்தானது. இந்திய குடியரசு தின விழா சிறப்பு விருந்தினர் இல்லாமல் கொண்டாடப்பட்டது.
அதனையடுத்து ஏப்ரல் 26 ஆம் தேதி போரிஸ் ஜான்சன் இந்தியா வரவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவரின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வருகை மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் காணொளி காட்சிகள் மூலம் இரு நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் கூறியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.