தமிழகம்

கட்டுக்குள் வராத கொரோனா; ஊரடங்கை நீட்டிக்கிறதா தமிழக அரசு !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதோடு கடந்த 10 ஆம் தேதி அதிகாலை முதல் இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் காய்கறி, மளிகை, இறைச்சி கடைகளுக்கு காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என்றும் பஸ்,ஆட்டோ,டாக்சி உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தினசரி தொற்று அதிக எண்ணிக்கையில் பதிவாகி வருகிறது. 

ALSO READ  மறைந்த எழுத்தாளர் கி.ராவின் உடலுக்கு அரசு மரியாதை !

இந்நிலையில் இதனை தடுப்பதற்கு தமிழக அரசு ஊரடங்கை நீட்டிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தமிழகத்தில்  அமலில் இருக்கும் முழு ஊரடங்கு வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குரூப் 4 தேர்வு முறைகேடு : 2 தாசில்தார்கள் கைது

Admin

கொரோனா 3வது அலை – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்…!

News Editor

30 ஆண்டுகளாக மலை கிராமங்களில் நடந்தே சென்று பணியாற்றிய தபால்காரர்- பெருமை சேர்த்த IAS அதிகாரி… 

naveen santhakumar